கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தலிபான்களுக்கு ஆதரவாக குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்; காரணம் என்ன தெரியுமா?

ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதை கொண்டாடும் விதமாக கோதமான் பகுதியில் நடைபெற்ற பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

News image

கோப்புப்படம்

Updated On :3 அக்டோபர் 2021, 9:07 am

DIN

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்ததை கொண்டாடும் விதமாக காபூலுக்கு வடக்கே உள்ள மைதானத்தில் நடைபெற்ற பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலிபான்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். 

ஆப்கன் தலைநகரின் புறநகரில் அமைந்துள்ள கோதமானில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலிபான் அமைப்பின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், பெண்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஏழு வாரங்களுக்கு முன்பு, காபூலை தலிபான்களை கைபற்றியதைத் தொடர்ந்து நடைபெறும் முதல் தலிபான் ஆதரவு கூட்டம் இதுவாகும்.

கூட்டத்தின் இறபுறமும், தலிபான்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பில் நின்றுக் கொண்டிருக்க, பந்தலுக்கு கீழே நாற்காலியில் அமர்ந்திருந்த மக்கள், தலிபான் அதிகாரிகள் ஆற்றிய உரையை கேட்டனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, கொடி, ராக்கெட் ஏவுகணைகள் உள்பட ஆயுதங்களை ஏந்தியபடி தலிபான்கள் அணிவகுப்பு நடத்தினர்.

பதாகைகளை ஏந்தியபடியும் சிவப்பு, வெள்ளை தலைபாகைகள் அணிந்தும் அங்கு கூடியிருந்தவர்கள் தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக, மக்கள் கூட்டத்திற்கு வரும்போது, அங்கு தலிபான்களை கொண்டாடும் விதமாக பாடல்கள் ஒலிக்கப்பட்டது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு லாரியில் வந்திறங்கிய சிலர் தலிபான் ஆதரவு கோஷம் எழுப்பினர். 

கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு முன்பிருந்த பகுதிக்கு வந்திருந்த ஒரு சிலர் 'அல்லாஹ் அக்பர்' என முழங்கினர். கடந்த வியாழக்கிழமை, சிறுமிகளின் கல்விக்கு ஆதரவாக பெண்கள் நடத்திய போராட்டத்தை தலிபான்கள் துப்பாக்குச்சூடு நடத்தில் கலைத்தனர். உயர் நிலை பள்ளிகளில் படிக்க சிறுமிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கக் கோரி கிழக்கு காபூலில் உள்ள உயர் நிலை பள்ளிக்கு வெளியே பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டத்தை முன்னெடுத்து செல்ல பெண்கள் முற்பட்டபோது தலிபான்கள் அவர்களை பின்னுக்கு தள்ளினர். இதை விடியோ எடுக்க முயன்ற வெளிநாட்டு பத்திரிகையாளருக்கு குண்டு அடிப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.