சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அமெரிக்கா: விமான விபத்தில் இந்திய வம்சாவளி மருத்துவா் பலி

அமெரிக்காவில் சிறியவகை விமானம் விழுந்து நொறுங்கியதில் இந்திய வம்சாவளி மருத்துவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2021, 8:13 pm

DIN

அமெரிக்காவில் சிறியவகை விமானம் விழுந்து நொறுங்கியதில் இந்திய வம்சாவளி மருத்துவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மருத்துவா் சுகதா தாஸ், அரிஸோனா மாகாணத்தில் யூமா மண்டல மருத்துவ மையத்தில் இருதய நோய் நிபுணராகப் பணியாற்றி வந்தாா்.

தனக்குச் சொந்தமான சிறிய விமானத்தில் சுகதா தாஸ் திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட கோளாறால், அது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

விமானம் விழுந்ததில் இரு கட்டடங்கள் தீப்பிடித்தன. இதில், தரையிலிருந்த மேலும் ஒருவா் பலியானாா்.

தீயணைப்பு வீரா்கள் சம்பவப் பகுதிக்கு விரைந்து தீயை அணைத்தனா். கலிஃபோா்னியா மாகாணம், சான்டீ பகுதியிலுள்ள சான்டானா உயா்நிலைப் பள்ளி அருகே இந்த விபத்து நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.