ஸ்பெயினின் கேனரி தீவில் உள்ள எரிமலை தீப்பிழம்புகள் கட்டுக்குள் வந்த நிலையில் ஊரடங்கைத் தளர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஸ்பெயினில் உள்ள லா பால்மாவின் கேனரி தீவின் தெற்கே உள்ளது டெனிகுவியா எரிமலை. அவ்வப்போது இந்த எரிமலையைச் சுற்றியுள்ள கும்ப்ரே விஜா தேசியப் பூங்கா பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம். நிலநடுக்க அச்சுறுத்தலால் எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பிலிப்பின்ஸில் வெள்ளம்: 9 பேர் பலி
இந்நிலையில் கும்ப்ரே விஜா எரிமலையில் தீப்பிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக எரிமலையிலிருந்து லார்வா குழம்புகள் கசியத் தொடங்கின. இதனால் அப்பகுதியில் புகைமண்டலம் சூழ்ந்தது.
செப்டம்பர் 19 ஆம் தேதி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 600 ஹெக்டேர் பரப்பளவில் தீப்பிழம்புகளும் லார்வாக்களும் சூழ்ந்தன. மேலும் சுற்றுவட்டாரத்தில் இருந்த குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளை லார்வாக்கள் சூழ்ந்து அழித்தன.
எரிமலை வெடிப்பு காரணமாக வளிமண்டலத்தின் அதிகப்படியான புகை மண்டலம் சூழ்ந்ததால் மக்கள் சுவாசிக்க ஏதுவாக காற்றின் தரம் இல்லாததாக அறிவிக்கப்பட்டது. அதன்காரணமாக ஊரடங்கை அறிவித்து அம்மாகாண அரசு உத்தரவிட்டது.
இதையும் படிக்க | தலிபான்களுக்கு சவால் ஐஎஸ்கே!
இந்நிலையில் லாபால்மா பகுதியைச் சுற்றி ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் மக்கள் சுவாசிக்கத்தக்க வகையில் காற்றின் தரம் மேம்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரலாம் என ஊரடங்கைத் தளர்த்தி அறிவித்துள்ளனர்.
முன்னதாக, கும்ப்ரே வீஜா எரிமலையைச் சுற்றி கடந்த மாதத்தில் மட்டும் 25,000க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் கண்டறியப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தரமேரூரில் 8 சுயேச்சைகள் உள்பட 14 போ் போட்டி!

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


