தாலேட்ஸ் (phthalates) என்ற ரசயானத்தை கொண்டு பல்வேறு விதமான பொருள்கள் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, நெகிழி கொள்கலன் முதல் ஒப்பனை பொருள்கள் வரை இதைவைத்து தான் தயாரிக்கப்படுகிறது. இதனை தினமும் பயன்படுத்தியதான் காரணமாகவே அமெரிக்காவில் ஆண்டுக்கு 1 ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என நியூயார்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொம்மை, ஆடை, ஷாம்பு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் இந்த ரசாயனம் உடலில் உள்ள நாளமில்லா அமைப்பை (Endocrine system) பாதிப்புக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையே, ஹார்மோன் இடையூறுகள் என்றழைக்கப்படுகிறது.
இதன் ஆய்வு முடிவுகள் சுற்றுச்சூழல் மாசுபாடு என்ற ஆய்வு பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. பல பொருள்களின் வாயிலாக இந்த நச்சுப்பொருள் உடலில் சென்று உடல் பருமன், நீரிழிவு, இருதய நோய் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது என ஆய்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் நடத்திய இந்த ஆய்வில் 55 வயது முதல் 64 வயது வரை உள்ள 5,000 பேர் கலந்து கொண்டுள்ளனர். சிறுநீரில் அதிகளவு தாலேட்ஸ் இருக்கும்பட்சத்தில் அவர்கள் இருதய நோயால் உயிரிழப்பதற்கு வாய்ப்புள்ளது என்றும் ஆய்வில் கூறியுள்ளனர்.
இருப்பினும், இவர்களுக்கு புற்று நோய் ஏற்பட்டு உயிரிழப்பதற்கு வாய்ப்பு குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. ஆய்வை முன்னின்று நடத்திய முடிவுகளை வெளியிட்டுள்ள லியோனார்டோ ட்ரசாண்டே இதுகுறித்து கூறுகையில், "அதிகமாக தாலேட்ஸை பயன்படுத்துவதற்கும் முன்கூட்டியே மரணிப்பதற்கும் நிறைய தொடர்புகள் இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இருதய நோய் காரணமாக அவர்கள் உயிரிழக்கின்றனர்.
இதுவரை, இருதய நோய் ஏற்படுவதற்கு ரசாயனங்கள் காரணம் என்பதை புரிந்து கொண்டுள்ளோம். இந்த இருதய நோயால் மரணம் ஏற்படுகிறது. ஆனால், மரணம் ஏற்படுவதற்கு காரணம் ரசாயனம் என்பதை நாங்கள் தொடர்புப்படுத்தவில்லை.
இதையும் படிக்க | உலகம் முழுவதும் கரோனாவால் 23.94 கோடி பேர் பாதிப்பு
எங்களின் முடிவுகள், தாலேட்ஸ் பயன்பாட்டுக்கும் மரணத்திற்கும் உள்ள நேரடி தொடர்பை நிரூபிக்கவில்லை. ஏனெனில், அதன் உயிரியல் வழிமுறைகளை எங்களால் தெளிவாக விளக்க முடியவில்லை. நாங்கள் நினைத்ததை விட இந்த ரசாயனம் சமூகத்தில் ஏற்படுத்தும் மரணங்கள் அதி்கமாக இருக்கின்றன. எனவே, நச்சு நிறைந்த தாலேட்ஸின் பயன்பாட்டை கட்டுப்படுத்தினால் அமெரிக்கர்களின் உடல் நலத்தையும் பொருளாதார நிலையைும் காப்பாற்ற முடியும் என்பது மறுக்க முடியாக உண்மை" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக அரசியலை தீா்மானிக்கும் சக்தியாக தவாக மாறியுள்ளது: தி.வேல்முருகன்

ஆயுஷ் மாத்ரே அரைசதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 210 ரன்கள் இலக்கு!

பாட்னா விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் நபர் கைது

கீழ்வேளூா் தவெக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


