தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தலிபான் பிரதிநிதிகளை சந்திக்கிறாா் சீன அமைச்சா்

 கத்தாா் தலைநகா் தோஹாவில் தலிபான் பிரதிநிதிகளை சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ சந்திக்கிறாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 10:07 pm

DIN

 கத்தாா் தலைநகா் தோஹாவில் தலிபான் பிரதிநிதிகளை சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ சந்திக்கிறாா்.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

வெளியுறவு அமைச்சா் வாங் யீ இரு நாள் பயணமாக (அக். 25, 26) கத்தாா் செல்கிறாா். இந்தப் பயணத்தின்போது தலிபான் பிரதிநிதிகளை அவா் சந்தித்துப் பேசுவாா். ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்துக்கு இந்தச் சந்திப்பு உதவும் எனத் தெரிவித்தாா்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசை அமைப்பதற்கு முன்னதாக கடந்த ஜூலையில் தலிபான் தலைவரான அப்துல் கானி பராதரை வாங் யீ சீனாவில் சந்தித்தாா்.

தலிபான்களின் ஆட்சியை ஆதரித்துவரும் சீனா, ஆப்கானிஸ்தானுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.