மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உலகம் முழுவதும் கரோனாவால் 24.36 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24.36 கோடியாக அதிகரித்துள்ளது. 

News image
உலகம் முழுவதும் கரோனாவால் 24.36 கோடி பேர் பாதிப்பு
Updated On :25 அக்டோபர் 2021, 5:18 am

DIN

உலகளவில் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24.36 கோடியாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும்  நோய் பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.54 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.35 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.41 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.54 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளாக பிரேசில்- 2.17 கோடி , இங்கிலாந்து - 88.84 லட்சம் , ரஷியா - 81.7 லட்சம், துருக்கி - 78.32 லட்சம்,  பிரான்ஸ் -72.78 லட்சம் ,   அர்ஜென்டினா- 52.65 லட்சம்  , ஈரான்- 58.62 லட்சம் , கொலம்பியா - 49.91 லட்சம் பேர் என்கிற எண்ணிக்கையில் இருக்கிறது.

பலியானவர்களின் எண்ணிக்கை - பிரேசில் (6,05,099) இந்தியா  (4,54,651), மெக்ஸிகோ  (2,86,259), பெரு  (2,00,019), ரஷியா  (2,26,403),  இந்தோனேசியா  (1,43,848), இங்கிலாந்து  (1,39,950) இத்தாலி  (1,31,826), கொலம்பியா  (1,27,067), பிரான்ஸ்  (1,18,405)  ஈரான் (1,25,223) , அர்ஜென்டினா (1,15,886)

உலகளவில் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 49.40 லட்சமாக உயர்ந்திருக்கிறது.தொற்றிலிருந்து மீண்டவர்கள் 22.88 கோடி பேர்.

மேலும் உலகம் முழுவதும் நோயின் தாக்கத்தை குறைக்க இதுவரை 680 கோடி தடுப்பூசிகள்   செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.