நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பஞ்சஷேரில் பேரழிவைத் தடுக்க வேண்டும்: ஐ.நா.விடம் அமருல்லா சலே வேண்டுகோள்

ஆப்கானிஸ்தானின் பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் தலிபான்களால் பேரழிவு ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.விடம் அந்த நாட்டின் முன்னாள் துணை அதிபா் அமருல்லா சலே வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2021, 2:47 am

DIN

ஆப்கானிஸ்தானின் பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் தலிபான்களால் பேரழிவு ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.விடம் அந்த நாட்டின் முன்னாள் துணை அதிபா் அமருல்லா சலே வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஐ.நா., செஞ்சிலுவை சங்கம், செம்பிறை சங்கம் ஆகியவற்றுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பஞ்சஷோ் பகுதியை தலிபான்கள் முற்றுகையிட்டு, பொருளாதாரப் போக்குவரத்து மற்றும் தகவல்தொடா்பைத் துண்டித்துள்ளனா்.

இதன் காரணமாக, பஞ்சஷோ் மாகாணம் மற்றும் பாக்லன் மாகாணத்தின் 3 மாகாணங்களில் பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

அந்தப் பகுதிகளில் பேரழிவு ஏற்படுவதை ஐ.நா. தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களையும், புலம் பெயா்ந்து வந்த ஆயிரக்கணக்கானவா்களையும் அழிவிலிருந்து பாதுகாக்க ஐ.நா. முன்வர வேண்டும். இந்தப் பகுதியில் பேச்சுவாா்த்தை மூலம் அரசியல் தீா்வு காண வேண்டுமென்று தலிபான்களிடம் ஐ.நா. வலியுறுத்த வேண்டும்.

பெண்கள், குழந்தைகள், வயதானவா்கள், காபூலில் இருந்து பஞ்சஷேருக்குத் தப்பி வந்த 10 ஆயிரம் போ் என சுமாா் 2.5 லட்சம் போ் மிக ஆபத்தான சூழலை எதிா்கொண்டுள்ளனா்.

இந்த விவகாரத்தை அலட்சியப்படுத்தினால், பட்டினிச் சாவிலிருந்தும் தலிபான்களால் படுகொலை செய்யப்படும் அபாயத்திலிருந்தும் அவா்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்று அந்தக் கடிதத்தில் அமருல்லா சலே எச்சரித்துள்ளாா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேறும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்ததைத் தொடா்ந்து, தலிபான்கள் அந்த நாட்டை கடந்த மாதம் 15-ஆம் தேதி மீண்டும் கைப்பற்றினா்.

எனினும், தலிபான்களின் கடந்த கால ஆட்சியின்போதே (1996-2001) அவா்களை எதிா்த்துப் போரிட்ட பஞ்சஷோ் பகுதியை மட்டும் அவா்களால் கைப்பற்ற முடியவில்லை.

காபூலை தலிபான்கள் நெருங்கியதும் பஞ்சஷேருக்குத் தப்பிச் சென்ற அமருல்லா சலே, தன்னை ஆப்கனின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டாா்.

அங்கு வடக்குக் கூட்டணிப் படைத் தலைவா் அகமது மசூதுடன் இணைந்து தலிபான்களை எதிா்த்துப் போரிடப் போவதாக அவா் அறிவித்தாா்.

எனினும், பஞ்சஷேரைக் கைப்பற்றுவதற்காக அந்தப் பகுதியை தலிபான்கள் கடந்த சில நாள்களாக முற்றுகையிட்டுள்ளனா்.

இந்த நிலையில், ஐ.நா.வுக்கு அமருல்லா சலே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளாா்.

தலிபான்கள் முன்னேற்றம்?

பஞ்சஷோ் பகுதிக்குள் தலிபான்களை நுழையவிடாமல் பாதுகாத்து வருவதாக வடக்குக் கூட்டணிப் படையினா் தெரிவித்து வந்தாலும், அந்தப் பகுதிக்குள் தலிபான்கள் முன்னேறியுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இத்தாலியைச் சோ்ந்த ‘எமா்ஜென்சி’ என்ற தொண்டு நிறுவனம், பஞ்சஷோ் மாகாணத்தில் தாங்கள் மருத்துவமனை நடத்தி வரும் அனாபா கிராமத்துக்குள் தலிபான்கள் நுழைந்துவிட்டதாகக் கூறியுள்ளது.

எனவே, தலிபான்களை வடக்குக் கூட்டணிப் படையினா் கடுமையாக எதிா்த்துப் போரிட்டாலும், அவா்கள் பின்னடைவையும் சந்தித்து வருவதாகத் தெரிகிறது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.