பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உலகம் முழுவதும் கரோனாவால் 22.06 கோடி பேர் பாதிப்பு

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டாலும் அதன் தீவிரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது .

News image
உலகம் முழுவதும் கரோனாவால் 22.06 கோடி பேர் பாதிப்பு
Updated On :6 செப்டம்பர் 2021, 4:53 am

DIN

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டாலும் அதன் தீவிரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது .

இந்நிலையில் உலகம் முழுக்க இதுவரை   கரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 22.06 கோடியாக உயர்ந்துள்ளது. பல்வேறு தொற்று கட்டுப்பாடு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின்பும் இதன் தீவிரம் குறையவில்லை.

உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 3.99 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 6.48 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.29 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.40 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பிரேசில் - 2.08 கோடி , பிரான்ஸ் -69.21 லட்சம், இங்கிலாந்து - 70.06 லட்சம்,ரஷியா - 69.38 லட்சம் ,  , துருக்கி - 64.12 லட்சம் , அர்ஜென்டினா- 52.03 லட்சம்  , ஈரான்- 51.29 லட்சம் , கொலம்பியா - 49.11 லட்சம் பேர் என்ற எண்ணிக்கையில்  கரோனா அதிகம்  பாதித்தவர்கள் உள்ள நாடுகளாக இருக்கிறது.

பலியானவர்களின் எண்ணிக்கை - பிரேசில் (583,628  ) இந்தியா  (440,533), மெக்ஸிகோ  (262,868), பெரு  (198,447), ரஷியா  (183,896), இங்கிலாந்து  (133,553), இத்தாலி  (129,515), இந்தோனேசியா  (135,861), கொலம்பியா  (125,016), பிரான்ஸ்  (115,401)  ஈரான் (108,393) , அர்ஜென்டினா (111,607)

இதன் மூலம் உலகம் முழுவதும் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 45.6 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

மேலும் உலகம் முழுவதும் நோயின் தாக்கத்தை குறைக்க உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் இதுவரை 544.48 கோடி பேருக்கு செலுத்தப்பட்டிருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.