எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உலகளவில் கரோனா நிலவரம்: முக்கிய விவரங்கள்

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22.61 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 46.52 லட்சமாக அதிகரித்துள்ளது. 

News image
உலகளவில் கரோனா நிலவரம்: முக்கிய விவரங்கள்
Updated On :14 செப்டம்பர் 2021, 9:19 am

DIN

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22.61 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 46.52 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்ததை அடுத்து தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் தொற்று பாதிப்போர் மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 22,61,04,062-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 46,52,640 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 20,27,37,603 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,87,13,819 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,02,383 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,21,40,103  கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 6,80,274-ஆக உயர்ந்துள்ளது. 

நோய்த்தொற்று பாதிப்புகளைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,32,88,021-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 4,43,247 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,10,06,424-ஆக உயர்ந்துள்ளது. பலிகளைப் பொறுத்தவரை 5,87,138 பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.