பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ரயிலிலிருந்து புறப்பட்டு இலக்கைத் தாக்கும் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா

ரயிலிலிருந்து சென்று திட்டமிட்ட இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையை வடகொரியா ராணுவம் புதன்கிழமை சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது.

News image
ரயிலிலிருந்து புறப்பட்டு இலக்கைத் தாக்கும் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா
Updated On :17 செப்டம்பர் 2021, 10:11 am

DIN

ரயிலிலிருந்து சென்று திட்டமிட்ட இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையை வடகொரியா ராணுவம் புதன்கிழமை சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது.

வடகொரிய நாடானது அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அமைப்புகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் உலக அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.

இந்நிலையில் ரயிலிலிருந்து புறப்பட்டு திட்டமிட்ட இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது. கிழக்கு கடற்கரைப் பகுதியில் சுமார் 800 கி.மீ. தொலைவில் இருந்த இலக்கை ஏவுகணை தாக்கி அழித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மலைப் பகுதியில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையானது தீப்பிழம்புகளுடன் புறப்பட்டு செல்லும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

யாங்டோக்கின் மத்திய பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையிலான இரண்டு ஏவுகணைகளை அந்நாடு சோதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.