எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உலகம் முழுவதும் 600 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும் தொற்றின் தீவிரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது .

News image
உலகம் முழுவதும் 600 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated On :24 செப்டம்பர் 2021, 5:04 am

DIN

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும் தொற்றின் தீவிரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது .

உலகம் முழுக்க இதுவரை   கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23.04 கோடியாக உயர்ந்துள்ளது. பல்வேறு தொற்று கட்டுப்பாடு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின்பும் இதன் தீவிரம் குறையவில்லை.

உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.40 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 6.77 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.35 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.64 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்று(செப்-23) நிலவரப்படி 600.2 கோடி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளதாக தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் :

சீனா - 212.9 கோடி

இந்தியா - 84.15 கோடி

ஐரோப்பா ஒன்றியம் -65 கோடி

அமெரிக்கா - 46.6 கோடி 

பிரெசில் - 20.07 கோடி 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.