ஹைட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200-யைத் தாண்டியுள்ளது. 5,700 பேர் காயமடைந்துள்ளனர்.
கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் டிபுரோன் தீபகற்பப் பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.2 எனப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியிருந்தவா்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. முதலில், இடிபாடுகளிலிருந்து 304 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 420 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 724-ஆக அதிகரித்தது.
இதையடுத்து, மேலும் 573 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து பலி எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, 5,700 பேர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக, தலைநகா் போா்டோபிரின்ஸுக்கு மேற்கே சுமாா் 125 கிமீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, கரோனா பரவல், வறுமை, அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலையால் ஏற்பட்டுள்ள பதற்றம் போன்றவற்றில் சிக்கித் திணறும் ஹைட்டியில், தற்போது இந்த நிலநடுக்கம் காரணமாக நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. சுமார் 13,000 கட்டடங்கள் இடிந்துள்ளன. வீடுகளை இழந்த மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவை மட்டுமின்றி, அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள கிரேஸ் புயல் ஹைட்டியை திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளது மக்களிடையே கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைட்டியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், இந்த ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் மோசமானது என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மதுரை மத்திய தொகுதி: ஹாட்ரிக் அடிப்பாரா பழனிவேல் தியாகராஜன்?

பற்றி எறிந்த கேம்ப் நௌ திடல்..! பார்சிலோனா அபார வெற்றியுடன் (7-2) காலிறுதிக்கு முன்னேற்றம்!

சீனாவுக்கான அடுத்த இந்தியத் தூதர்! யார் தெரியுமா?

தொகுதிப் பங்கீடு: திமுக - மநீம இடையே 2-ம் கட்ட பேச்சு!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

