ஈரான் : அதிகரித்து வரும் கரோனா பலி

இந்தியாவைப் போல அண்டை நாடுகளிலும் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. கட்டுப்பாடுகளை உருவாக்கி பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் தொற்று பரவலை தடுக்க முடியவில்லை. 
ஈரான் : அதிகரித்து வரும் கரோனா பலி
ஈரான் : அதிகரித்து வரும் கரோனா பலி

இந்தியாவைப் போல அண்டை நாடுகளிலும் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. கட்டுப்பாடுகளை உருவாக்கி பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் தொற்று பரவலை தடுக்க முடியவில்லை. 

தற்போது ஈரானில் கரோனா பரவல் அதிகரித்து வருவதோடு பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 655 பேர் கரோனாவால் உயிரிழந்திருப்பதாகவும் 41,914 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கரோனாவால் 620 பேர் பலியாகியிருந்தனர்.

மேலும் தொற்றில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதால் 5 நாள் ஊரடங்கை அரசு அறிவித்திருக்கிறது. இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் வேறு இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது .

கரோனாவின் தாக்கம் தீவிரம் அடைந்து வரும் நிலையிலும் வெறும் 40% மக்கள் மட்டுமே முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதாகவும் 4% மக்கள் தான் தடுப்பூசி எடுத்துக்கொண்டதாகவும்  சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com