இலங்கை : 12 வயதைக் கடந்த சிறார்களுக்கு தடுப்பூசி

இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கரோனா தாக்குதலின் பாதிப்புகளைக்  கட்டுப்படுத்த 12 வயதைத் தாண்டிய சிறார்களுக்கு  தடுப்பூசி வழங்கப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் ராஜபக்சே ' இலங்கையில் கரோனாவை படிப்படியாக கட்டுப்படுத்த குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிட்டிருக்கிறோம். முதலில் 12 வயதைக் கடந்த சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்' எனத் தெரிவித்திருக்கிறார்.

தற்போது 30 வயதைக் கடந்தவர்களுக்கே தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதில் முதல் தவணை எடுத்துக்கொண்டவர்கள் 1.1 கோடி பேர் என்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 37 லட்சம் பேர் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,54,000 ஆகவும், பலி எண்ணிக்கை 6,096 ஆகவும் உள்ளது. இதன் காரணமாக அங்கு இரவு நேர ஊரடங்கு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com