
துருக்கி வெள்ளப் பெருக்கு - பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு
துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஏற்பட்ட கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு முன்னதாக 44 பேர் இறந்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்திருக்கிறது. மாயமான 47 பேரை தேடும் பணியும் தொடர்ந்து வருகிறது.
இதில் காஸ்தமோனு பகுதியில் 62 பேரும் , சினோப் பகுதியில் 11 பேரும் மற்றும் பார்ட்டின் பகுதியில் ஒருவரும் இறந்திருப்பதாகவும் , அப்பகுதிகளைச் சேர்ந்த 2,440 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | துருக்கியில் மழை-வெள்ளம்: 44 போ் பலி
முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் 19 ஹெலிகாப்டர்கள் , 17 படகுகளுடன் 4,680 மீட்புப்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள் தற்போது மேலும் இரண்டு கப்பல்கள் மக்களின் உடமைகளை மீட்க அனுப்பப்பட்டிருக்கிறது.
கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கட்டடங்கள், பாலங்கள் மற்றும் கார்கள் சேதாரமாகியிருக்கிறது.