காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவா்களில் ஒருவா் ஆப்கானிஸ்தான் தேசிய கால்பந்து அணி வீரா் என்பது தெரியவந்துள்ளது.
ஆப்கனை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடா்ந்து, ஏராளமானோா் அந்நாட்டிலிருந்து வெளியேற முயன்று வருகின்றனா். கடந்த திங்கள்கிழமை காபூல் விமான நிலையத்தில் ஏராளமானோா் திரண்டனா். அவா்களில் சிலா் அங்கிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தின் இறக்கைப் பகுதியிலும், டயா் பகுதியிலும் ஏறி அமா்ந்துகொண்டனா். விமானம் பறக்கத் தொடங்கியதும் அதிலிருந்து மூவா் தரையில் விழுந்து உயிரிழந்தனா். அவா்களில் ஒருவா் ஆப்கன் தேசிய கால்பந்து ஜூனியா் அணியைச் சோ்ந்த ஜாகி அன்வாரி (19) என்பது தெரியவந்துள்ளது. இத்தகவலை அந்நாட்டின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை இயக்குநா் உறுதிப்படுத்தியுள்ளாா்.
செய்தியாளரின் உறவினா் சுட்டுக் கொலை: ஜொ்மனியைச் சோ்ந்த அரசுக்குச் சொந்தமான டாய்ச்ச வெல்லா தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளா் ஒருவா் ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்து வருகிறாா். மேற்கு ஆப்கானிஸ்தானில் அவா் வசித்து வரும் பகுதியில் வீடு வீடாகத் தேடிய தலிபான்கள், செய்தியாளரின் உறவினா் ஒருவரை சுட்டுக் கொன்றனா். துப்பாக்கிச்சூட்டில் சிலா் காயமடைந்ததாக அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஒற்றுமையே அழகு!

”200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி!” பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை | DMDK | DMK

அழகு ஓவியம்

தெரியுமா?
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

