
ஸ்பெயின் நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணம் செய்தவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆப்பிரிக்காவின் ஐவரிகோஸ்டில் இருந்து புறப்பட்ட கப்பல் ஸ்பெயின் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்தக் கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க | இலங்கையில் அமலுக்கு வந்தது பொதுமுடக்கம்
தகவலறிந்த மீட்புப் படையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர். விபத்துக்குள்ளான கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அக்கப்பலில் பயணம் செய்த 53 பேரில் ஒருவர் மட்டும் மீட்கப்பட்டார். எஞ்சிய 52 நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை.
இதையும் படிக்க | 150க்கும் மேற்பட்ட இந்தியர்களைக் கடத்திய தலிபான்கள்?
மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் கடலில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.