கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கனிலிருந்து இ-விசாவில் மட்டுமே இந்தியா வர முடியும்: மத்திய அரசு அறிவிப்பு

அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் இ-விசாவில் மட்டுமே இந்தியா வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் இ-விசாவில் மட்டுமே இந்தியா வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய நிலையில் தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுவதுமாக  கைப்பற்றி அங்கு ஆட்சியமைப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டினரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள உலக நாடுகள், ஆப்கன் விவகாரம் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றன. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இ-விசாவில் மட்டுமே இந்தியா வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையால் அங்குள்ள இந்துக்கள், சீக்கியர்கள் உள்பட அந்நாட்டினர் இந்தியா வர இ-விசாவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் விசா செயல்முறையை ஒழுங்குபடுத்துவதன் காரணமாக, இனிமேல் அனைத்து ஆப்கானிஸ்தான் நாட்டினரும் இந்தியாவுக்கு வரவேண்டுமெனில் இ-விசா மூலமாக மட்டுமே வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 

மேலும் அந்நாட்டிலிருந்து இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியுள்ளது. 

இந்தியா வர விரும்பும் ஆப்கானிஸ்தானியர்கள் www.indianvisaonline.gov.in இல் இ-விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com