
கோப்புப்படம்
வியந்நாமில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கனமழையில் சிக்கி இதுவரை 18 பேர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வியந்நாம் நாட்டில் மத்தியப் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்தமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உடல் நலக் குறைபாட்டுடன் பிறந்த மகள்; தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவருக்கு எதிராக வழக்கு
சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. வயல்வெளிகளில் புகுந்த வெள்ளநீரால் இதுவரை 780 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளபாதிப்பில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில் மீட்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 18 பேர் மாயமாகி உள்ளதாகவும், அவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
இதையும் படிக்க | தென் ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் கரோனா தொற்று
முன்னதாக கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 378 பேர் வரை பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...