மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு: 70 பேர் மாயம், ஒருவர் பலி

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 70 பேர் மாயமாகியிருக்கிறார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 70 பேர் மாயமாகியிருக்கிறார்கள்.

வடக்கு மியான்மர் நாட்டில் மாணிக்கக் கல்லை எடுக்கும் சுரங்கத்தில் இன்று 70-க்கும் மேற்பட்டவர்கள் மாணிக்கத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது திடீரென சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் அதில் சிக்கினர்.

இதுகுறித்து தெரிவித்த மீட்புப் குழுவினர், மாயமானவர்களில்  ஒருவர் பலியானதாகவும் 70-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com