பட்டத்தை பறக்கவிட்ட இளைஞர், பட்டத்தோடு சேர்ந்து பறந்த சோகம்

பொதுவாக, பட்டத்தைப் பறக்கவிட மாஞ்சா நூல்களைப் பயன்படுத்துவதால், வாகனத்தில் செல்வோரின் உயிருக்குத்தான் ஆபத்து நேரிடும். ஆனால், இலங்கையில் நடந்திருக்கும் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பட்டத்தை பறக்கவிட்ட இளைஞர், பட்டத்தோடு சேர்ந்து பறந்த சோகம்
பட்டத்தை பறக்கவிட்ட இளைஞர், பட்டத்தோடு சேர்ந்து பறந்த சோகம்
Published on
Updated on
1 min read


யாழ்ப்பாணம்: பொதுவாக, பட்டத்தைப் பறக்கவிட மாஞ்சா நூல்களைப் பயன்படுத்துவதால், வாகனத்தில் செல்வோரின் உயிருக்குத்தான் ஆபத்து நேரிடும். ஆனால், இலங்கையில் நடந்திருக்கும் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில், சில இளைஞர்கள் சேர்ந்து, வீட்டில் தயாரிக்கப்பட்ட ராட்சதப் பட்டங்களை, நூலோடு இணைத்து பறக்கவிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக, ஒரு இளைஞர், பட்டத்தின் நூலைப் பிடிக்கப்போக, அந்த நூல், இளைஞரை தூக்கியபடி வானத்தில் பறக்கத் தொடங்கியது.

ராட்சதப் பட்டம் காற்றின் வேகத்தால் மெலெழும்ப எழும்ப, இளைஞரும் வானில் பறந்தபடி, தனது உயிரை நூலில் பிடித்தபடி இருந்தார். இதனை அவருடன் பட்டம்விட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் கடும் அதிர்ச்சியுடன் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒருவழியாக, நூலைப்பிடித்துக் தொங்கிக் கொண்டிருந்த இளைஞர், பட்டம் சற்று தாழப் பறந்தபோது, கீழே குதித்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சிகள் அங்கிருந்த ஒருவர், தனது செல்லிடப்பேசியில் படம்பிடிக்க, அது, சமூக வலைத்தளங்களல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com