
இலங்கையில் சக காவலர் சுட்டதில் 4 காவலர்கள் பலி
கொழும்பு: இலங்கையின் திருக்கோவில் நகரப் பகுதியில், காவலர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 4 காவலர்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.
திருக்கோவில் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. காவலர் ஒருவர், காவல்நிலையத்தில் நின்றிருந்த காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார்.
இதையும் படிக்க.. கதையல்ல.. நிஜம்: மாதம் ரூ.20,000 சம்பாதிக்கும் சூரத் சிறைக் கைதிகள்
கிறிஸ்துமஸ் ஈவ் நிகழ்ச்சியின் போது, வெள்ளிக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவத்தில் நான்கு காவலர்கள் பலியாகினர் என்று மூத்த காவலர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிய காவலர்கள், அருகில் உள்ள மற்றொரு காவல்நிலையத்தில் துப்பாக்கியுடன் சரணடைந்தார். இதற்கான பின்னணி குறித்த விசாரிக்கப்பட்டு வருகிறது.