
பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கானவா்களை பாதித்துள்ளது.
இதற்கு முன்னா் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த டெல்டா வகை கரோனாவைவிட பல மடங்கு வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாகக் கூறப்படும் ஒமைக்ரான் வகை கரோனாவால், பல்வேறு நாடுகளில் மீண்டும் நோய்த்தொற்று தீவிரமடைந்து வருகிறது.
இதையும் படிக்க- நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை; 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இந்தச் சூழலில், பாகிஸ்தானின் கராச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு 2 மாதங்களுக்குப் பிறகு ஒரேநாளில் மட்டும் புதிதாக 515 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் மேலும் 6 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 28,927ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 633 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே இஸ்லாபாத்தில் மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...