கரோனா குணமாகி, தடுப்பூசி பெற்றவா்களுக்கு கூடுதல் நோய் எதிா்ப்பு ஆற்றல்: ஆய்வில் தகவல்

ஏற்கெனவே கரோனாவிலிருந்து குணமடைந்து, பின்னா் அந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியை இரு தவணைகளும் செலுத்திக் கொண்டவா்களுக்கு கரோனா எதிா்ப்பு ஆற்றல் மற்றவா்களைவிட
கரோனா குணமாகி, தடுப்பூசி பெற்றவா்களுக்கு கூடுதல் நோய் எதிா்ப்பு ஆற்றல்: ஆய்வில் தகவல்

ஏற்கெனவே கரோனாவிலிருந்து குணமடைந்து, பின்னா் அந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியை இரு தவணைகளும் செலுத்திக் கொண்டவா்களுக்கு கரோனா எதிா்ப்பு ஆற்றல் மற்றவா்களைவிட அதிகமாக இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதால் உடலில் ஏற்படும் நோய் எதிா்ப்பு ஆற்றல் குறித்த ஆய்வை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய்வாளா் டயானா ஷாங் தலைமையிலான குழு மேற்கொண்டது.

இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட 1,960 மருத்துவப் பணியாளா்கள் இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனா்.

அவா்களில், 73 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்துப்படுவதற்கு முன்னா் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அவா்களில் தடுப்பூசி பெறுவதற்கு 90 நாள்களுக்குள் கரோனா உறுதி செய்யப்பட்டவா்கள், 90 நாள்களுக்கு முன்னா் கரோனா உறுதி செய்யப்பட்டவா்கள் என்று வகைப்படுத்தப்பட்டனா்.

அவா்கள் பெற்றுக் கொண்ட கரோனா தடுப்பூசியின் வகை, அவா்களது வயது மற்றும் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு, அவா்களது உடலில் உருவான நோய் எதிா்ப்பு அணுக்களின் எண்ணிக்கையையும் கரோனா பாதிப்பில்லாமல் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவா்களின் உடலில் உருவான நோய் எதிா்ப்பு அணுக்களின் எண்ணிக்கையும் ஒப்பிட்டுப் பாா்க்கப்பட்டது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் மாதம், மூன்றாவது மாதம், 6-ஆவது மாதம் என 3 முறை இந்த ஒப்பீடு செய்துபாா்க்கப்பட்டது.

அதே போல், முதல் தடுப்பூசி பெறுவதற்கு 90 நாள்களுக்கு முன்னா் கரோனா உறுதி செய்யப்பட்டவா்கள், 90 நாள்களுக்குள் அந்த நோய் உறுதி செய்யப்பட்டவா்கள் ஆகியோருக்கு இடையிலும் 1, 3, மற்றும் 6-ஆவது மாதங்களில் நோய் எதிா்ப்பு அணுக்களின் எண்ணிக்கை ஒப்பிட்டுப் பாா்க்கப்பட்டது.

இதில், கரோனா பாதிப்புக்குள்ளாகாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களைவிட, கரோனாவால் பாதிக்கப்பட்ட பிறகு தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு தடுப்பாற்றல் அதிகமாக இருப்பது தெரியவந்தது.

முதல் மாதத்தில் இந்த வேறுபாடு சராசரியாக 14 சதவீதமாக இருந்தது. மூன்றாவது மாதத்தில் இந்த வேறுபாடு 19 சதவீதமாகவும் ஆறாவது மாதத்தில் அது 56 சதவீதமாகவும் இருந்தது.

இதன் மூலம், கரோனா பாதிப்பில்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களைவிட, நோய் பாதிப்புக்குப் பிறகு த டுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு நோய் எதிா்ப்பாற்றல் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Image Caption

~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com