நிலக்கரி உற்பத்திக்கு தடைகோரும் ஒப்பந்தத்தை தவிர்த்த வளர்ந்த நாடுகள்

காலநிலை மாற்றத்தைத் தடுக்க நிலக்கரி உற்பத்தியை நிறுத்துவதற்கு 40 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட ஜி20 நாடுகள் ஒப்பந்தத்தை கையெழுத்திடாமல் தவிர்த்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காலநிலை மாற்றத்தைத் தடுக்க நிலக்கரி உற்பத்தியை நிறுத்துவதற்கு 40 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட ஜி20 நாடுகள் ஒப்பந்தத்தை கையெழுத்திடாமல் தவிர்த்துள்ளன.

காலநிலை மாற்றத்தைத் தடுப்பது தொடர்பாக உலக நாடுகள் பங்குபெற்றுள்ள  காலநிலை மாநாடு ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் கடந்த நவம்பர் 31ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில் நிலக்கரி உற்பத்தியை நிறுத்துவது முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காலநிலை மாற்ற பாதிப்பை தடுக்கும் விதமாக நிலக்கரி உற்பத்தியை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் உலகின் 40 நாடுகள் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளன.

போலந்து, உக்ரைன், இந்தோனேசியா, தென்கொரியா, வியந்நாம் உள்ளிட்ட 23 நாடுகள் புதிய நிலக்கரி ஆலைகளை அமைக்கும் முடிவைக் கைவிடுவதாகவும் அறிவித்துள்ளன.எனினும் அதிகப்படியான கார்பன் வெளியீட்டைக் கொண்டுள்ள உலகின் பொருளாதார முன்னணி நாடுகள் இந்த ஒப்பந்தத்தைத் தவிர்த்துள்ளன. 

சீனா, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் நிலக்கரி உற்பத்தியை தற்போதைய சூழலில் உடனடியாக நிறுத்த முடியாது எனவும், 2040ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக நிலக்கரி உற்பத்தியை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளன.

இந்தியாவும் சீனாவும் உலகின் மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றன. அதேபோல் அமெரிக்காவும் ஐந்தில் ஒரு பகுதி மின்சாரத்தை நிலக்கரி மூலம் உற்பத்தி செய்து வருகிறது.

கிளாஸ்கோ மாநாட்டிலும் நிலக்கரி உற்பத்தியை நிறுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை முன்னணி நாடுகள் தவிர்த்துள்ளது சூழலியல் ஆர்வலர்களை கவலை கொள்ள செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com