இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான அதி முக்கியத்துவம் வாய்ந்த 2+2 பேச்சுவார்த்தை நவம்பரில் நடைபெறும் என வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்கலா தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள ஷ்ரிங்கலா, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கள் உள்பட பல முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார்.
பின்னர், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுவகையில், "நவம்பரில் நடைபெறவுள்ள 2+2 பேச்சுவார்த்தையை எதிர்நோக்கியுள்ளோம். தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இன்றைய பயணத்தை பயன்படுத்திக் கொண்டு இணைச் செயலாளர்களுக்கிடையேயான 2+2 பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோம்" என்றார்.
இதையும் படிக்க | துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மோடி வாழ்த்து
கடந்த முறை, இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் 2+2 பேச்சுவார்த்தை தில்லியில் நடைபெற்றது. இம்முறை, பைடன் அதிபராக பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் 2+2 பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் ஆகியோரும் அமெரிக்காவின் சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆப்கானிஸ்தான், ஐநா, இந்தாண்டின் இறுதியில் நடைபெறவுள்ள குவாட் நாடுகளின் மாநாடு ஆகிய விவகாரங்கள் குறித்து ஷ்ரிங்கலா ஆலோசனை மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்

சென்னையில் தொடா்ந்து 5 ஆட்டங்களில் சிஎஃப்சி பங்கேற்பு

எந்த இடத்திலும் வழிபாடு நடத்துவது மத சுதந்திரம் கிடையாது : மும்பை உயா்நீதிமன்றம்
இனி வாட்ஸ் ஆப் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை! அவசர கால உதவியை விரைந்து பெறலாம்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

