கோப்புப்படம்
கோப்புப்படம்

வன்முறை கலாசாரத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது: இந்தியா குற்றச்சாட்டு

ஜம்மு காஷ்மீர் விவகாரம், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி குறித்து ஐநாவுக்கான பாகிஸ்தான் தூதர் பேசிய நிலையில், இந்தியா இந்த கடுமையான விமரிசனத்தை முன்வைத்துள்ளது.

வன்முறை கலாசாரத்தை உள்நாட்டிலும் எல்லை பகுதிகளிலும் பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரித்துவருவதாக இந்தியா விமரிசனம் முன்வைத்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று பேசிய ஐநாவுக்கு இந்தியாவின் நிரந்தர தூதர் விதிஷா மைத்ரா, "அமைதி என்ற கலாசாரம் காகிதத்தில் மட்டும் வைத்து கொண்டு மாநாடுகளின்போது கொண்டாட வேண்டிய ஆலோசிக்க வேண்டிய விழுமியமோ, கொள்கையோ அல்ல. உறுப்பு நாடுகளுக்கிடையே உலகளாவிய உறவுகளை வளர்க்க வேண்டியது அவசியமுள்ளது" என்றார்.

'அமைதி கலாசாரத்தின் பங்கு: கரோனாவுக்கு பிந்தைய மீண்டெழ வேண்டிய காலத்தில் மீள வேண்டிய திறனையும் அனைவரையும் உள்ளடக்க வேண்டிய அவசியத்தையும் ஊக்குவிப்பது' என்ற தலைப்பில் நடைபெற்ற உயர் மட்ட கருத்தரங்கில் பங்கேற்ற விதிஷா மைத்ரா, "உள்நாட்டிலும் எல்லை பகுதிகளிலும் வன்முறை கலாசாரத்தை தூண்டு அதே நேரத்தில் ஐநாவில் இந்தியாவுக்கு எதிராக வெறுப்பை பரப்பும் பாகிஸ்தானின் மற்றொரு முயற்சி இது. இந்த முயற்சிகளை இந்தியா ஏற்கவில்லை. கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரம், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி குறித்து ஐநாவுக்கான பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம் பேசிய நிலையில், இந்தியா இந்த கடுமையான விமரிசனத்தை முன்வைத்துள்ளது. 

பாகிஸ்தான் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய விதிஷா மைத்ரா, "சகிப்புத்தன்மையின்மை மற்றும் வன்முறையின் வெளிப்பாடாகவே பயங்கரவாத உள்ளது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இவை, மதங்கள், கலாசாரத்திற்கு எதிரானவை. மதத்தை பயன்படுத்தி கொண்டு இச்செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் பயங்கரவாதிகளாலும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாலும் உலகம் கவலைப்பட வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com