அரை நிர்வாணமாக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; தலிபான்கள் அட்டூழியம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள், வெளிநாட்டு செய்தியாளர்கள் ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அரை நிர்வாணமாக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
அரை நிர்வாணமாக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என புதிய அரசை அமைத்த தலிபான்கள் உறுதி அளித்திருந்தனர். ஆனால், அங்கு பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகிவருகிறது. தாக்குதல் காரணமாக படுகாயம் அடைந்த பத்திரிகையாளர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உலக நாடுகளை உலுக்கியுள்ளது.

தலிபான் அரசு அமைக்கப்பட்டு பிறகு, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற இரண்டு புகைப்படங்கள் உறுதி செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகளிலிருந்து பகிரப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸை சேர்ந்த வெளிநாட்டு பத்திரிகையாளர் மார்கஸ் யாம், ஆப்கன் செய்தி நிறுவனம் ஆகியோர் இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அதில், இரண்டு பத்திரிகையாளர்கள் உள்ளாடையுடன் மட்டும் நிற்கவைக்கப்பட்டு பின்புறத்திலிருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள் புகைப்படங்களில் தென்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்களான தகி தர்யாபி மற்றும் நெமத்துல்லா நக்தி ஆகியோர் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என எதிலாட்ரோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எதிலாட்ரோஸ் செய்தி நிறுவனம், "மேற்கு காபூல் கார்ட்-இ-சார்
பகுதியில் விடியோ எடிட்டர், செய்தியாளர் ஆகியோர் பெண்கள் போராட்டம் குறித்த செய்தியை சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது, தலிபான்கள் அவர்களை கடத்தி சென்று அரையில் அடைத்து தாக்கியுள்ளனர். கொடுமைப்படுத்தியுள்ளனர்" என தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com