ஆப்கனில் இருந்து 1.24 லட்சம் பேர் பாதுகாப்பாக மீட்பு: அமெரிக்கா தகவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து 1.24 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 
ஆப்கனில் இருந்து 1.24 லட்சம் பேர் பாதுகாப்பாக மீட்பு: அமெரிக்கா தகவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து 1.24 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுவதுமாக  கைப்பற்றியு அங்கு ஆட்சியமைப்பதற்கான பல்வேறு பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரங்களை காலி செய்த பல்வேறு நாடுகள் தங்களுடைய நாட்டினரை மீட்கும் பணியில் ஈடுபட்டன. இதில் அதிகபட்சமாக அமெரிக்கா, தங்கள் நாட்டு அதிகாரிகள், படை வீரர்கள் உள்பட 1.24 லட்சம் பேரை மீட்டுள்ளது. 

அமெரிக்காவின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் இதுகுறித்து, ஆப்கானிஸ்தானில் இருந்து 1,24,000 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். எங்களுடைய ராணுவம் மற்றும் உளவுத்துறை வல்லுநர்கள் மூலமாக மட்டுமே கற்பனை செய்ய முடியாத மிகவும் கடினமான இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 31 ஆம் தேதி முழுவதுமாக வெளியேற்றப்பட்டதுகுறிப்பிடத்தக்கது . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com