உதவியாளர் பணிக்கு 15 லட்சம் பேர் போட்டி: பாகிஸ்தானில் அதிகரிக்கும் வேலையின்மை

பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வகையில் வேலையின்மை நிலவி வருவதாக  பாகிஸ்தான் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வகையில் வேலையின்மை நிலவி வருவதாக  பாகிஸ்தான் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பின்மை குறித்த தரவுகள் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன. நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களில் 24 சதவிகிதம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிலைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய வேலைவாய்ப்பின்மை அறிக்கையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்ற பெண்களில் 40 சதவிகிதத்தினர் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் அறிக்கையின் படி ஒரு நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிக்கு 15 லட்சம் பேர் போட்டியில் உள்ளது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் அரசின் சார்பில் எத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்படாததை சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கையானது நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் தரவு விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது வேலைவாய்ப்பின்மை விகிதம் 16 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பாகிஸ்தான் புள்ளியியல் நிறுவனம் மேற்கொண்ட தொழிலாளர் கணக்கெடுப்பு ஆய்வின்படி வேலைவாய்ப்பின்மை விகிதமானது 2017-18ஆம் ஆண்டில் 5.8 ஆகவும் அதுவே 2018-19ஆம் ஆண்டில் 6.9 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com