எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நடுவானில் நேருக்கு நேர் விமானங்கள் மோதி விபத்து: மூன்று விமானி பலி

தென்கிழக்கு நகரமான சச்சியோனில் உள்ள விமான தளம் அருகே மதியம் 1:35 மணி அளவில் விபத்து நடைபெற்றதாக விமானப் படை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 ஏப்ரல் 2022, 7:28 am

DIN

தென் கொரியாவில் இரண்டு பயிற்சி விமானங்கள் வெள்ளிக்கிழமை நடுவானில் மோதி கொண்டது. அங்கு இம்மாதிரியான விபத்து நடைபெறுவது அரிதிலும் அரிதான ஒன்று. இந்த விபத்தில் மூன்று விமான உயிரிழந்ததாகவும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு நகரமான சச்சியோனில் உள்ள விமான தளம் அருகே மதியம் 1:35 மணி அளவில் விபத்து நடைபெற்றதாக விமானப் படை தெரிவித்துள்ளது. எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று விமானிகள் உயிரிழந்ததாகவும் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விபத்துக்குள்ளான பகுதியில் 30 தீயணைப்பு வீரர்கள் ஆய்வு மேற்கொண்டுவருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.