ஷாங்காய்: தொடங்கிய இடத்திலிருந்தே மீண்டும் தனது வெறியாட்டத்தை ஆரம்பித்திருக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சீனத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சீனத்தின் ஷாங்காய் மாகாணத்தில், குழந்தைக்கும் தாய்க்கும் கரோனா உறுதி செய்யப்பட்டாலும், குழந்தைகள் தனியாக தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள் முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் வரை குழந்தைகளுக்கான கரோனா மையங்களில் வைக்கப்படுவதாகவும், பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் தனிமைப்படுத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

சீனாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகவும், வணிக நகரமாகவும் விளங்கும் ஷாங்காயில், குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுவது குறித்து ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த தகவல் எங்கிருந்தும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், சீனாவில் இயங்கும் சில சமூக வலைத்தளங்களில், குழந்தைகள் தனிமைப்படுத்தும் மையங்களில் அழுதுகொண்டே இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. ஒரு படுக்கையில் தலா மூன்று குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் பிறந்து மூன்று மாதங்கள் கூட ஆகாத குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு அறையில் சுமார் எட்டு குழந்தைகள் இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு ஒரு பராமரிப்பாளர் கூட இல்லாத புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
பிரித்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தையைப் பற்றி எந்த தகவலும் பெற்றோருக்கு கிடைப்பதில்லை. குழந்தை அனுமதிக்கப்படும்போது குழந்தை நன்றாக உள்ளது என்ற குறுந்தகவலைத் தவிர.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


