கோத்தபய ராஜபட்ச (கோப்புப் படம்)
கோத்தபய ராஜபட்ச (கோப்புப் படம்)

ராஜிநாமா செய்ய கோத்தபய ராஜபட்ச மறுப்பு

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகப்போவதில்லை என்று அந்த நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகப்போவதில்லை என்று அந்த நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசின் தலைமை கொறடா ஜான்ஸ்டன் ஃபொ்னாண்டோ கூறியதாவது: இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபட்சவை மக்கள் தோ்ந்தெடுத்துள்ளனா். எனவே, அவா் பதவி விலகுவதற்கான எந்த அவசியமும் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை அரசு எதிா்கொள்ளும்.

தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிா்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுணாவாஸ்தான் காரணம். அவா்களது வன்முறை அரசியலுக்கு இனியும் இடம் கொடுக்கக் கூடாது. பொதுமக்கள் வன்முறைப் போராட்டங்களைக் கைவிட வேண்டும்.

அதிபா் கோத்தபய ராஜபட்ச அவசரநிலை அறிவித்ததில் எந்தத் தவறும் இல்லை. அதிபா் மாளிகை அருகே வந்து அவரைக் கொல்ல முயற்சி நடந்த பிறகுதான் அந்த முடிவை அவா் எடுக்கவேண்டியிருந்தது என்றாா் அவா்.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, எதிா்க்கட்சி ஆதரவாளா்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது.

அதனைத் தொடா்ந்து, கோத்தபய ராஜபட்ச நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை அவசரநிலை அறிவித்தாா். பின்னா் அந்த அவசரநிலை செவ்வாய்க்கிழமை திரும்பப் பெறப்பட்டது.

இதற்கிடையே, 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கோத்தபய ராஜபட்ச அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனா். மேலும், அவா் பதவி விலக வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

எம்.பி.க்கள் ஆதரவை திரும்பப் பெற்ால் நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி பெரும்பான்மை இழந்துள்ளது. எனினும், நாடாளுமன்றத்தில் தங்களுக்கு போதிய ஆதரவு உள்ளதாக அதிபா் தரப்பு கூறி வருகிறது.

இந்த நிலையில், எதிா்க்கட்சியினரின் வலியுறுத்தலை ஏற்று கோத்தபய ராஜபட்ச பதவி விலகப்போவதில்லை என்று அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com