'இதுதான் மிகவும் மோசமான போர்' - அதிபர் ஸெலென்ஸ்கி பேச்சு
ரஷியாவில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த போர்தான் மிகவும் மோசமானது என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.


ரஷியாவில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த போர்தான் மிகவும் மோசமானது என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. அதிலும் சமீபத்தில் ரஷியப்படையினர் நிகழ்த்திய புச்சா படுகொலை குறித்து உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று கிரேக்க நாடாளுமன்றத்தில் பேசிய உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி,
ரஷியாவை நீதியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மாஸ்கோவின் நடவடிக்கைகள் உக்ரைனுக்கு மட்டும் எதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கும் எதிரானது.
ரஷியா மற்றும் அதனைப் போன்ற நாடுகளுக்கு நாம் பாடம் கற்பிக்க முடியும். போரை ஆரம்பிப்பவர்கள்தான் தோல்வி அடைகிறார்கள். பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடியால் ஐரோப்பாவை அச்சுறுத்துபவர்கள் எப்போதும் தோல்வியை சந்திக்கிறார்கள்.
ரஷியாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை உலக நாடுகள் நிறுத்த வேண்டும்; சர்வதேச நிதி அமைப்பிலிருந்து ரஷியாவை நீக்க வேண்டும். ரஷியாவின் அனைத்து வங்கிகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.
மரியுபோல் நகரம் முழுவதுமாக அழிந்துவிட்டது. மரியுபோலை ஒழுங்குபடுத்த உலக நாடுகள் உதவ வேண்டும். ரஷியாவால் கட்டவிழ்த்து விடப்பட்ட இதுதான் மிகவும் மோசமான போர்.
கிரீஸ் நாட்டிற்கும் மரியுபோலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 1821 போரில் 'சுதந்திரம் அல்லது இறப்பு' என்ற கிரீஸ் நாட்டின் வாக்கியத்தைத் தான் உக்ரைன் மக்களும் கடைப்பிடிக்கின்றனர்' என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...