ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2022, 11:19 am

DIN

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

பாகிஸ்தானில் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான கூட்டணி ஆட்சி செய்து வந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டி அவா் மீது எதிா்க்கட்சி கூட்டணி சாா்பில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம், பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டது.

அதன்படி இன்று(ஏப்ரல் 9) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. இந்நிலையில் இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தராமல் இருந்தனர்.

இவற்றுக்கு மத்தியில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த துணை பேரவைத் தலைவரின் உத்தரவை ரத்து செய்த நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.