2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ரஷியா மீது மேலும் பொருளாதாரத் தடை: பிரிட்டன் அதிரடி

ரஷியாவைச் சேர்ந்த மேலும் 26 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. 

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 12:23 pm

DIN

ரஷியாவைச் சேர்ந்த மேலும் 26 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் போரினால் உலக நாடுகள் பலவும் ரஷியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. 

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷிய வங்கிகள், தொழிலதிபர்கள், முக்கிய நிறுவனங்கள், அமைப்புகள் மீது படிப்படியாக பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. 

இந்நிலையில் பிரிட்டன் இன்று ரஷியாவைச் சேர்ந்த மேலும் 26 நிறுவனங்கள்/தனிநபர்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. 

ரஷிய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் இகோர் கோனஷென்கோவ், விமானப்படையினர் கமாண்டர் ஆன்ரி செர்டிகோவ், ராணுவ நிபுணர் இகோர் கோரோட்சென்கோ, ரஷிய ரயில்வே தலைமைச் செயல் அதிகாரி ஓலெக் பெலோஸ்ரோவ் உள்ளிட்டோரின் சொத்துகள் மற்றும் அவர்கள் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல காலநிஷிகோவ் ராக்கெட் ஸ்பேஸ் சென்டர் உள்ளிட்ட நிறுவனங்களின் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.