கொழும்பு: பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க நிதிக் கொள்கைகளை பலப்படுத்தி, வரியை அதிகரிக்குமாறு பன்னாட்டு நிதியம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என நாடே பொருளாதார பின்னடைவால் கடும் பாதிப்புகளை சந்தித்துவருகிறது.
இந்த நிலையில், பன்னாட்டு நிதியத்துக்கான ஆசிய மற்றும் பசிபிக் துறை செயல் இயக்குநர் கூறியிருப்பதாவது, கடன்களை சமாளிக்கும் வகையில் தேவையான நிதி உதவி அளிப்பது உறுதி செய்யப்படும், பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில் நிதிக் கொள்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கே ஆகியோர் பன்னாட்டு நிதியத்துடன் ஆலோசனை நடத்தி, நாட்டுக்கு நிதியுதவி செய்வதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்ததன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒவ்வொரு நெருக்கடியிலும் ஏழைகள் முதலில் பலியாவது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி!

நாட்டின் செழிப்பே தனிநபர் முன்னேற்றத்திற்கு அடிப்படை: மோகன் பாகவத்!

டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து ஈரான் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; 25 பேர் பலி!

கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்! குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாற்றம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


