உலகளவில் கரோனா பாதிப்பு 24% குறைந்துள்ளது: உலக சுகாதார அமைப்பு

உலகளவில் கரோனா பாதிப்பு 24% குறைந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
உலகளவில் கரோனா பாதிப்பு 24% குறைந்துள்ளது: உலக சுகாதார அமைப்பு

லண்டன்: உலகளவில் கரோனா பாதிப்பு 24% குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளவில் கடந்த வாரத்தில் கரோனா பாதிப்பு நான்கில் ஒரு பங்கு குறைந்தாலும், கடந்த மாதத்தில் கரோனா தொற்றால் இறப்பு சதவீதம் 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உலகில் எல்லா இடங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்துள்ளன. ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 40% மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு கரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

மேற்கு பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கரோனா தொற்றால் இறப்புகள் முறையே 31% மற்றும் 12% அதிகரித்ததுள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் இறப்புகள் குறைவாகவே உள்ளது. 

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

உலகளவில் கடந்த மாதத்தில் கரோனா தொற்று இறப்புகள் 35% அதிகரித்துள்ளதாகவும், கடந்த வாரத்தில் 15,000 இறப்புகள் பதிவானதாகவும் குறிப்பிட்டார்.

நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் அனைத்து கருவிகளும் இருக்கும்போது, ​​ஒரு வாரத்திற்கு 15,000 இறப்புகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று டெட்ரோஸ் கூறினார்.

சமூக இடைவெளி, கைக்கழுவுதல், முகக்கவசம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா முற்றிலுமாக இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. 2 தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.   2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com