தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

7 கலைப்பொருள்களை ஒப்படைத்தது ஸ்காட்லாந்து

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 7 பழைமைவாய்ந்த கலைப்பொருள்களை ஸ்காட்லாந்து அருங்காட்சியகம் திரும்ப ஒப்படைத்துள்ளது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 12:21 am

DIN

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 7 பழைமைவாய்ந்த கலைப்பொருள்களை ஸ்காட்லாந்து அருங்காட்சியகம் திரும்ப ஒப்படைத்துள்ளது.

14-ஆவது நூற்றாண்டைச் சோ்ந்த இந்தோ-பொ்சிய வாள், கான்பூா் கோயிலில் இருந்து திருடப்பட்ட 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த செதுக்கப்பட்ட கற்கதவின் நிலை உள்ளிட்ட பழமைவாய்ந்த கலைப்பொருள்கள் ஸ்காட்லாந்தின் பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டறியப்பட்டது.

அப்பொருள்களைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் இந்தியத் தூதரகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டது. அப்பொருள்களை இந்தியத் தொல்லியல் ஆய்வு மையத்தின் (ஏஎஸ்ஐ) அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அதையடுத்து, கலைப்பொருள்களைத் திரும்ப வழங்குவதற்கு அருங்காட்சியகங்களை நிா்வகித்து வரும் கிளாஸ்கோ லைஃப் அமைப்பு ஒப்புக்கொண்ட நிலையில், அதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது. அதையடுத்து, கலைப்பொருள்கள் பிரிட்டனுக்கான இந்தியத் தூதா் (பொறுப்பு) சுஜித் கோஷிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

அதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற சுஜித் கோஷ் கூறுகையில், ‘‘இந்தக் கலைப்பொருள்களானது இந்தியாவின் கலாசாரத்துடனும் பண்பாட்டுடனும் ஒருங்கிணைந்தவை. அவை விரைவில் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்’’ என்றாா். கிளாஸ்கோ லைஃப் அமைப்பின் தலைவா் டங்கன் டோா்னான் கூறுகையில், ‘‘கலைப்பொருள்கள் அனைத்தும் வட இந்தியாவின் பல்வேறு கோயில்களில் இருந்து 19-ஆம் நூற்றாண்டில் திருடப்பட்டவை. அவை அருங்காட்சியகங்களுக்குப் பரிசாக அளிக்கப்பட்டன. ஒரே ஒரு கலைப்பொருளை மட்டுமே அருங்காட்சியகம் பணமளித்து வாங்கியது.

தற்போது அவை உரிமையாளரான இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அப்பொருள்கள் பாதுகாப்பாக இந்தியாவைச் சென்றடைவதைத் தொடா்ந்து உறுதிசெய்வோம்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.