
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அண்டை நாடான இலங்கைக்கு இந்திய அரசு 21,0000 டன் உர வகைகளை வழங்கியுள்ளது.
2.2 கோடி மக்கள்தொகை கொண்ட இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கே மக்கள் அல்லல்பட்டு வருகின்றனா்.
கரோனா தொற்றுக்குப் பிறகு இலங்கையின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது.
அண்டை நாடுகளுக்கு இந்திய அரசு எபோதும் உதவும். அந்த வகையில் தற்போது இலங்கைக்கு 21000 டன் உர வகைகளை வழங்கியுள்ளது.
இலங்கையிலுள்ள இந்தியாவின் தூதரக அதிகாரி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
நட்பு மற்றும் ஒத்துழைப்பில் மேலும் வலுவை கூட்டுவது போல இந்தியா தற்போது 21,000 டன் உர வகைகளை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த மாதம் 44,000 டன் வழங்கியதைத் தொடர்ந்து இந்திய மொத்தமாக 2022இல் 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உதவி புரிந்துள்ளது. இந்த உரங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் இலங்கை விவசாயிகளுக்கு உதவும். இது இந்தியாவுடன் இணைந்திருக்கும் இலங்கை மக்களுக்கும் இந்தியாவுக்குமான இருதரப்பு மக்களுக்கும் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வலுப்படுத்தும் கூட்டு பலனாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.