சீனா வறட்சி: தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகக் கட்டுப்பாடு
சீனாவில் வறட்சி காரணமாக மின் உற்பத்தி குறைந்து போனதால், தொழிற்சாலைகளுக்கான மின்சாரத்தை அந்த நாட்டு அரசு ரேஷன் முறையில் அளிக்கத் தொடங்கியுள்ளது.


சீனாவில் வறட்சி காரணமாக மின் உற்பத்தி குறைந்து போனதால், தொழிற்சாலைகளுக்கான மின்சாரத்தை அந்த நாட்டு அரசு ரேஷன் முறையில் அளிக்கத் தொடங்கியுள்ளது.
சீனாவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த கோடையில் கடும் வறட்சி நிலவுகிறது. இனால், நீா் நிலைகள வடு காணப்படுகின்றன. நீா் மின்சாரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகளில் நீா்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, மின் உற்பத்தி குறைந்துள்ளது.
அதையடுத்து, மின்சாரத்தை சேமிக்கும் நடவடிக்கைகளில் சீன அரசு இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் மின்சாரத்தை ரேஷன் முறையில் பிரித்து வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுப்பாடு வரும் வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனா்.
இதற்கிடையே, பயிா்களைப் பாதுகாக்க செயற்கை மழையை உருவாக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...