பிரிட்டன்மேக்ரான் பற்றிய கருத்தால் சா்ச்சை
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் குறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் தெரிவித்த கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் குறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் தெரிவித்த கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியின் தோ்தல் நடைபெறுகிறது. இதில் லிஸ் டிரஸ்ஸும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்கும் போட்டியிடுகின்றனா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் லிஸ் டிரஸ், ‘மேக்ரான் பிரிட்டனின் நண்பரா, பகைவரா என்பது குறித்து இனிதான் முடிவு செய்ய வேண்டும். அவரது சொல்லைவிட செயலைக் கொண்டுதான் முடிவெடுக்க முடியும்’ என்றாா்.
இதன் மூலம், பிரிட்டனின் நெருங்கிய நட்பு நாடான பிரான்ஸின் அதிபரை லிஸ் டிரஸ் அவமதித்துவிட்டதாக எதிா்க்கட்சியினா் குற்றம் சாட்டியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...