அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் அதிக மழைப்பொழிவு காரணமாக தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அதிக மழைப்பொழிவு காரணமாக அங்குள்ள நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. ஜாக்சன் பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக மாகாண ஆளுநர் டேட் ரீவ்ஸ் அறிவித்துள்ளார்.
மிஸ்ஸிஸிப்பியில் 1.5 லட்சம் குடியிருப்பாளர்கள் உள்ள நிலையில் குடிநீர் மற்றும் இதரப் பயன்பாட்டுக்கான தண்ணீர் விநியோகம் தற்போது தொடங்கியுள்ளதாகவும் மக்கள் இந்த நிலையை தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'இபோது இருக்கும் தண்ணீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல, பல் துலக்குவதற்குக்கூட பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால் அதில் போதுமான குளோரினேஷன் இல்லை மற்றும் தண்ணீரில் உள்ள கிருமி நீக்கப்படவில்லை' என்று தெரிவித்துள்ள மாகாண சுகாதாரத்துறை அதிகாரி விரைவில் நிலைமையை சரிசெய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
கனமழையால் ஜாக்சன் பகுதியில் சுமார் 100 முதல் 150 கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கணித்துள்ளனர்.
இதையும் படிக்க | ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுபவரா? செலவைக் குறைப்பது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: பங்கு சந்தையில் ரூ. 16.32 லட்சம் கோடி இழப்பு!

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தி பெயர்! கல்வெட்டில் கருப்பு மை பூசிய திமுகவினர்!

புதிய கட்சி தொடங்கினார் புகழேந்தி!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

