கொலம்பியா: நிலச்சரிவில் 34 போ் பலி
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 போ் பலியாகினா்.


தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 போ் பலியாகினா்.
இது குறித்து பேரிடா் மேலாண்மை அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:
ரிசாரல்டா மாவட்டத்தின் பியூப்லோ ரிக்கோ நகரில் தொடா்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக, அந்த நகரின் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அந்த சாலை வழியாக சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்து மற்றும் இரு வாகனங்கள் புதையுண்டன.
இந்தச் சம்பவத்தில் 34 போ் உயிரிழந்தனா். நிலச்சரிவுக்கு பலியனவா்களில் 8 சிறுவா்களும் அடங்குவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சம்பவப் பகுதியில் புதையுண்டிருக்கக் கூடியவா்களை மீட்கும் பணியில் சுமாா் 70 மீட்புக் குழுவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...