2022-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 'டாப் 10' சொற்கள்!

2022ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் இருப்பதால், கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2022-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 'டாப் 10' சொற்கள்!

2022ஆம் ஆண்டு உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் முதலிடம் பெற்றுள்ள 10 வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

கூகுள் தேடுபொறியில் உலகத்தின் அனைத்து நிகழ்வுகள் குறித்தும் தரவுகள் குவிந்துள்ளன. நமக்குத் தேவையான பல தகவல்களை உடனடியாகப் பெற கூகுள் தேடுபொறியையே நம்பியுள்ளோம். அந்த அளவுக்கு கூகுள் தேவை அனைவரிடமும் பெருகியுள்ளது. 

அந்தவகையில் கடந்த 2022ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் எவை என்பது குறித்து கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் இருப்பதால், கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்துள்ளது. இது இணைய வார்த்தை விளையாட்டு. உலக அளவில் அதிக அளவிலான மக்கள் இந்த சொல்லை கூகுளில் தேடியுள்ளனர். 

அதற்கு அடுத்தபடியாக இந்தியா - இங்கிலாந்து (India vs England) சொல் உள்ளது. கடந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட உக்ரைன் போரால், உக்ரைன் எனும் சொல் 3வது இடம் பிடித்துள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக ராணி எலிசபெத் (Queen Elizabeth), 5வது இடத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா (Ind vs SA), 6வது இடத்தில் உலகக்கோப்பை (World Cup), 7வது இடத்தில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் (India vs West Indies), 
8வது இடத்தில் ஐ-போன் 14 (iPhone 14), 9வது இடத்தில் அமெரிக்க சீரியல் கில்லரான ஜெஃப்ரெ தாமெர் (Jeffrey Dahmer), 10வது இடத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) சொல் அதிகம் தேடப்பட்டுள்ளது. 

கூகுளில் நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் விளையாட்டு தொடர்பான சொற்களே அதிகம் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com