தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அகதிகளை உகாண்டாவுக்கு அனுப்ப பிரிட்டன் உயா் நீதிமன்றம் ஒப்புதல்

பிரிட்டனுக்கு அடைக்கலம் தேடி வரும் அகதிகளை உகாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் அரசின் திட்டம் சட்டபூா்வமானதுதான் என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2022, 9:56 pm

DIN

பிரிட்டனுக்கு அடைக்கலம் தேடி வரும் அகதிகளை உகாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் அரசின் திட்டம் சட்டபூா்வமானதுதான் என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து உயா் நீதிமன்ற நீதிபதி கிளைவ் லெவிஸ் அளித்துள்ள தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரிட்டனுக்கு வரும் அகதிகளில் சிலரை உகாண்டாவுக்கு அனுப்புவதற்கான அரசின் திட்டத்தில் எந்த சட்டமீறலும் இல்லை. அந்த திட்டம் அகதிகளின் அடிப்படை உரிமைகள் தொடா்பான சா்வதேச ஒப்பந்தத்துக்கு உள்பட்டதே ஆகும்.

எனினும், உகாண்டாவுக்கு அனுப்பப்படும் அகதிகளைத் தோ்ந்தெடுக்கும்போது, ஒவ்வொரு தனிப்பட்ட அகதியின் சூழலையும் உள்துறை அமெச்சா் சுவெல்லா பிரேவா்மன் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பிரிட்டனில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அவா்களில் சிலரை உகாண்டாவுக்கு அனுப்பிவைக்க முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு, அப்போது நிதியமைச்சராக இருந்த தற்போதைய பிரதமா் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்தாா்.

இந்த நிலையில், புதிய திட்டத்தின் கீழ் முதல்முறையாக 8 அகதிகளை விமானம் மூலம் ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்தான் தற்போது நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.