மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சர்வதேச பயணிகளுக்கு கரோனா சோதனை: சீனா கடும் விமரிசனம்

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யும் இந்திய, ஜப்பான் நாடுகளின் முடிவுக்கு சீனா கடும் விமரிசனத்தை முன் வைத்துள்ளது.

News image

சர்வதேச விமானிகளுக்கு கரோனா சோதனை: சீனா கடும் விமரிசனம்

Updated On :29 டிசம்பர் 2022, 12:20 pm

புது தில்லி: சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யும் இந்திய, ஜப்பான் நாடுகளின் முடிவுக்கு சீனா கடும் விமரிசனத்தை முன் வைத்துள்ளது.

சீனா அரசின் ஊடகம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்வது என்று இந்தியா, ஜப்பான் முடிவு செய்திருப்பது, சுய ஆறுதல் மட்டுமே என்று தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த கரோனா பேரிடர் காலத்தில் பயன்படுத்திய முறைகளையே தற்போதும் பின்பற்றுவது உண்மையில் எந்த பயனையும் அளிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில், இந்தியா ஒமைக்ரானின் திரிபு வைரஸ் பிஎஸ்.7-ஐ கண்டறிந்து அது பாதித்த நோயாளிகளை தனிமைப்படுத்துவதை வெற்றிகரமாக செய்து வருவதோடு, ஒரு புதிய திரிபு எந்த வகையில் செயல்படுகிறது என்ற ஆய்வையும் மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வது தொடர்பான முடிவை எடுப்பது குறித்து பிரிட்டனும் ஆலோசித்து வருகிறது.

ஏற்கனவே, சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என்பதை அமெரிக்கா புதன்கிழமை அறிவித்துவிட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.