

ஈக்வடார் நாட்டின் தலைநகர் குயிட்டோவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலியாகினர்.
ஈக்வடாரின் குயிட்டோவில் கடந்த திங்கள்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் அப்பகுதிகளில் பல குடியிருப்புகள், சாலைகள், பொது இடங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உருவான நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் இதுவரை 24 பேர் பலியாகினர். மேலும், 12 பேர் மாயமானதாகவும், 48 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு மீட்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இந்நிலையில், அடுத்த சில நாள்களுக்கு மழை தொடரும் என்பதால் மீட்புக்குழுவினர் பொதுமக்கள் பலரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.