உக்ரைன் விவகாரம்: இந்தியாவுடனான உறவில் உறுதியாக உள்ள அமெரிக்கா
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்த நிலையில், இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அமெரிக்க மறுப்புவிட்டது.


உக்ரைன் விவகாரம் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திவருகிறது. இதற்கு மத்தியில், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடத்தப்பட்ட வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது.
உக்ரைன் எல்லையில் சுமார் 1 லட்சம் ரஷிய வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். இதனால், அந்த நாட்டை ரஷியா ஆக்கிரமிக்கும் என்ற பதற்றம் எழுந்துள்ளது. அந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக நேட்டோ, அமெரிக்காவுடன் ரஷியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தச் சூழலில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திங்கள்கிழமை கூடியது.
எனினும், இதுதொடா்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்று ரஷியா ஆட்சேபித்தது. மேலும், ஆலோசனைக் கூட்டம் நடத்துவது குறித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினா்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷியா கோரியது.
அதன் தொடா்ச்சியாக நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆலோசனைக் கூட்டத்துக்கு எதிராக ரஷியாவும் சீனாவும் வாக்களித்தன. அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ், அயா்லாந்து, பிரேஸில், மெக்ஸிகோ உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகள் உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு ஆதரவாக வாக்களித்தன.
இதையும் படிக்க | உக்ரைன் தொடா்பான தீா்மானம்: ஐ.நா.வில் இந்தியா புறக்கணிப்பு
இந்தியா, கென்யா, மேற்கு ஆப்பிரிக்க நாடான கபான் ஆகியவை வாக்களிப்பைப் புறக்கணித்தன. இந்நிலையில், வாக்கெடுப்பு இந்தியா புறக்கணித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமெரிக்கா பதில் அளிக்க மறுத்துவிட்டது.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், "இந்தியாவுடன் எங்களுக்கு தனிப்பட்ட உறவு உள்ளது. அது தனி தகுதிப்பாடுகளுடன் நிலை நிற்கிறது" என்றார்.
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், இதனால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டுள்ளதா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இப்படி பதிலளித்துள்ளார். மேலும், இதுகுறித்து கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கு மறுத்துவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...