பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உக்ரைன் ராணுவம் சரணடைய புதின் எச்சரிக்கை

ரஷிய படைகள் எல்லையை தாண்டி, பெலாரஸ் வழியே உக்ரைனுக்குள் ரஷிய படைகள் நுழைந்துள்ள நிலையில், உக்ரைன் ராணுவ சரணடையுமாறு ரஷிய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். 

News image
விளாதிமீா் புதின்
Updated On :24 பிப்ரவரி 2022, 8:32 am

DIN

ரஷிய படைகள் எல்லையை தாண்டி, பெலாரஸ் வழியே உக்ரைனுக்குள் ரஷிய படைகள் நுழைந்துள்ள நிலையில், உக்ரைன் ராணுவ சரணடையுமாறு ரஷிய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். 

உக்ரைனின் மூன்று திசைகளில் இருந்து சுற்றிவளைத்து தாக்கி வரும் ரஷிய படைகள், கருங்கடல் பகுதியில் இருந்து போர்க்கப்பல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு பகுதியில் இருந்து விமானப்படை மூலம் குண்டுகளை வீசி, உக்ரைன் விமான தளங்கள், விமானப்படையை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

தற்போது ரஷியாவின் நட்பு நாடான பெலாரஸில் இருந்து உக்ரைன் வடக்கு நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது ரஷிய விமானப்படை. 

உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷிய படைகள் தொடர்ந்து பல்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வான்வழித் தாக்குதலை தொடர்ந்து ரஷியாவின் தரைப்படையும் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய உக்ரைன் ராணுவத்துக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்நிலையில், போர் மூண்டுள்ளதால் உக்ரைனின் மேற்கு எல்லை கீவ் நகரில் உள்ள மக்கள் ஆயிரக்கணக்கான கார்களில் புறப்பட்டுச் செல்கின்றனர். 

போர் மூண்டுள்ளதை அடுத்து அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் பங்க்குகளை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். நகரில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களையும் முற்றுகையிட்டு அவசர அவசரமாக பணத்தை எடுத்து வருகின்றனர். 

போர் மூண்டுள்ளதை அடுத்து பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

உக்ரைனின் கிழக்கில் உள்ள லுசான்ஸ்க் பகுதியில் உள்ள 2 நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக கிளிர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். 

லுசான்ஸ்க் நகரில் ரஷியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அதிகம் பேர் வசிப்பதால் பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.